• Breaking News

    கோவிலூற்றில் ஸ்தோத்திர பண்டிகை ஆசரிப்பு கூடாரம் திறப்பு விழா நடைபெற்றது


    கோவிலூற்றில் ஸ்தோத்திர பண்டிகை ஆசரிப்பு கூடாரத்தினை திருமண்டல முன்னாள் லே செயலர்  டி.எஸ்.ஜெயசிங் திறந்து வைத்தார்.

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள கோவிலூற்றில் டி.எஸ். டேனியல் ராஜம்மாள் நினைவு ஸ்தோத்திர பண்டிகை ஆசரிப்பு கூடாரம் திறப்பு விழா மற்றும்  கன்வென்சன் கூட்டம் நடைபெற்றது. சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல முன்னாள் லே செயலர்  டி.எஸ்.ஜெயசிங் தலைமை வகித்து திறந்து வைத்தார். ஆசிரியர் தங்கசாமி முன்னிலை வகித்தார்.சினட் உறுப்பினர் கே.ஏ.ஆனந்த் வரவேற்றார்.

    களக்காடு சேகர தலைவர் ஏசா சந்திரகுமார், தாழையூத்து சேகர தலைவர் பீட்டர், திருமண்டல பொருளாளர் அனிஸ்ஆசீர் சிறபப்ப விருந்;தினர்களாக பங்கேற்றனர். மேலும் விழாவில் ஜீவகுமார், செல்வராஜ், நோபுளி சாமுவேல், கோயில்மணி, தேவதாஸ்ஞானராஜ், மனோகரன், அருணோதயம், செல்வன், நெல்சன், அந்திரேயா, காட்வின், மோசஸ், சாத்ராக், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவிலூற்று சேகர மக்கள் செய்திருந்தனர்.

    No comments