வழக்கறிஞர் படுகொலை..... திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
No comments