சபரிமலையில் நவக்கிரக கோவில் பிரதிஷ்டை..... இன்று மாலை நடை திறப்பு.....
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
கோவிலில் நாளை (சனிக்கிழமை) சுத்தி கலச பூஜை வழிபாடுகள் நடைபெறும். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நவக்கிரக கோவில் பிரதிஷ்டை நடக்கிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.
தொடர்ந்து ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்தநாட்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
No comments