பா.ம.க கட்சியின் பரப்புரைப் பாடல் வரிகள் இதோ......
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூகநீதிக்கு எதிரான, மக்களை வாட்டி வதைக்கக் கூடிய, மக்களின் துயரங்களைத் துடைக்காமல் விளம்பர மோகத்தில் மகிழ்ச்சியடையும் திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை,
6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ' உரிமைப் பயணம் ' என்ற தலைப்பில் பரப்புரை பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை அன்புமணி ராமதாஸ் சற்று முன் அவரது சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டார்.
' உரிமைப் பயணம் ' பரப்புரைப் பாடலின் சமூக வலைத்தள இணைப்புகளும், வரி வடிவமும் கீழே தரப்பட்டுள்ளன.
'உரிமைப் பயணம்' பாடல்:-
பயணம் பயணம் உரிமை பயணம்
பெறுவோம் பெறுவோம் புறப்படுடா
அண்ணன் அக்கா தம்பிதங்கை வரணும்
அழைப்பது நம்ம அன்புமணிடா
நெருப்பாய்....இருப்போமே வா வா
தடைஉடைத்து....தகர்ப்போமே நீ.... வா
மக்கள்படும் துயரினை போக்கிட
அடிப்படை உரிமைகள் பெற்றிட
திமுக ஆட்சியை விரட்டிட
திரளுது அன்புமணி போர்ப்படையே
சரணம்:- 1
உனக்கும் எனக்கும் பங்கிட்டு கொடுக்கும்
சமூக நீதி உரிமைப்பெற
வன்முறை கற்பழிப்பு கொடுமைகள் இல்லா
பெண்களுக்கான உரிமைப்பெற
வேலைவாய்ப்பை இளைஞர்கள் வாங்க
தாய்தந்தையர் சுமைகள் நீங்க
எட்டுதிசையிலும் நம்மபலம் ஓங்க
இது அன்புமணி போர்ப்படையே
சரணம்:- 2
நீயும் நானும் வளமுடன் வாழ
அடிப்படை சேவையின் உரிமைப்பெற
பசியும் பட்டினியும் இல்லாது போக
உணவு தேவையின் உரிமைப்பெற
நம்ம
தமிழகம் வளர்ச்சியை காண
இந்த
திமுக பொம்மை ஆட்சி நீங்க
மக்கள் மகிழ்ச்சியில் தழைத்தோங்க
இது பாமக போர்ப்படையே
சரணம்:- 3
மதுவே இல்லா மாநிலமாக
தமிழகம் மாறிடும் உரிமைப்பெற
வேலை இல்லா திண்டாட்டம் ஒழிந்து
கல்வி கற்றவர் உரிமைப்பெற
நகரங்கள் வளர்ந்திடும் உரிமை
நல்ல சுற்றுச்சூழல் காத்திடும் உரிமை
இவை அனைத்தையும் மக்களுக்குத் தரவே
இது அன்புமணி போர்ப்படையே
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments