• Breaking News

    துணை முதலமைச்சர் இன்று திருச்சி வருகை

     


    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி வருகைதரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    No comments