• Breaking News

    நடிகர் சசிகுமார் நடிப்பில் Freedom படத்தின் டிரைலர் வெளியீடு

     


    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சசிகுமார் Freedom என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சத்ய சிவா இயக்கியுள்ள நிலையில் லிஜோமோல் ஜோஸ் ஹீரோயின் ஆக நடிக்கிறார்.

    இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் தவறே செய்யாத இருவர் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்குவது போன்று படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் ஜூலை மாதம் 10-ம் தேதி ரிலீசாகும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



    No comments