திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சின்னம்மாள், ஸ்ரீ ஏகாவள்ளியம்மன், ஸ்ரீ பச்சைமல்லியம்மன், ஸ்ரீ எட்டியம்மன் ,ஸ்ரீ மாரியம்மன், மதுரை வீரன் கோவில்கள் அமைந்துள்ளது.
இந்த நிலையில் அன்மையில் புதுப்பிக்கப்பட்ட இந்த கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலையில் 4 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் ஓம் சக்தி பரசக்தி என கோஷமிட்டு அம்மனை வணங்கினர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



0 Comments