திருச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.கடந்த ஆண்டு, மாணவன் தனது நண்பனின் வீட்டிற்கு சிறுமியை அழைத்து, அவரது சம்மதத்துடன் உல்லாசமாக இருந்ததாகவும், அப்போது சிறுமியின் ஆடையை கலைந்து, தனது செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இருவரும் தொடர்ந்து காதலை வளர்த்து வந்தனர்.
ஆனால், சிறுமியின் வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரியவந்ததால், அவர் மாணவனுடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், சிறுமியை நேரில் சந்தித்து, “வழக்கம்போல் பேசாவிட்டால், உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்; உன்னையும் உன் தந்தையையும் கொலை செய்துவிடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன சிறுமி, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment