சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் துவங்கியது..... 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்...... - MAKKAL NERAM

Breaking

Sunday, August 10, 2025

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் துவங்கியது..... 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்......

 


சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது. 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்களிக்கின்றனர்.


தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூலை 22-ம் தேதி துவங்கியது. சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வரும் தற்போதைய நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைவதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.


தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைத் தவிர, இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், 14 கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.


மூன்று அணிகளின் சார்பாக மொத்தம் 69 பேர் போட்டியிடுகின்றனர். தினேஷ், பரத், நிரோஷா, நவீந்தர், துரைமணி, ராஜ்காந்த், அழகப்பன், லொள்ளு சபா பழனியப்பன், மீனா குமாரி, பிரேமி வெங்கட், ரவீனா மற்றும் மறைந்த நடிகர் நேத்ரனின் மனைவி தீபா உள்ளிட்டோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment