திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த பாட்டைகுப்பம் கிராமத்தில் ஓம் ஸ்ரீ ஞானவேல் பக்த ஜன சபாவின் ஸ்ரீ முருக பக்தர்கள் 34 ம் ஆண்டு வேல் தரிக்கும் விழா , தீமிதி திருவிழா நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் முன்னிலையில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர் அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலகு குத்தியும் காவடி எடுத்தும் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தீ மிதித்து தாங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் பாதயாத்திரையாக திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டை பாட்டைகுப்பம் கிராம செட்டியார்கள் கிராம பெருந்தளக்காரர்கள் மற்றும் ஒரு பொது மக்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment