திருப்பனந்தாள் காசி மடத்து 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துமாரசாமி தம்பிரான் பரிபூரணம் அடைந்தார்..... தருமை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகன் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரிய சுவாமிகள் இரங்கல்...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 19, 2025

திருப்பனந்தாள் காசி மடத்து 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துமாரசாமி தம்பிரான் பரிபூரணம் அடைந்தார்..... தருமை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகன் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரிய சுவாமிகள் இரங்கல்......


திருப்பனந்தாள் காசி மடத்து 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துமாரசாமி தம்பிரான் பரிபூரணம் அடைந்தது முன்னிட்டு தருமை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகன் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரிய சுவாமிகள்  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

திருப்பனந்தாள் காசி மடத்து 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துமாரசாமி தம்பிரான் 


தருமையாதீன. முதன்மை சீடரும் காசிமடத்தின்21ஆவது அதிபரும் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் பரிபூர்ணம் எய்தினார் காசிமடத்தின் இளவரசாக. அதிபராக 50ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்தவர் தமிழகம் எங்கும் பலதிருக்கோயில் குடமுழுக்கு தரிசித்தவர் பல அறக்கட்டளை நிறுவியவர் காசி ராமேஸ்வரம் முதலாய பல அறங்களை செய்தவர் பன்னிரு திருமுறைகளை குறைந்தவிலையில் அச்சிட்டு பல்லாயிரம் கொடுத்தவர் நாம் துறவு ஏற்கவழிவகுத்து காறுபாறு பதவியும் கொடுத்து M.A Mphil Phd படிக்கவைத்து கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிவழங்கியவர் முதலாவது கயிலாயம் தரிசிக்க அனுப்பிவைத்தவர் தருமையாதீன கல்லூரியில் வித்வான் பயின்றவர் இறையடியில் சேர்ந்தார் எனும் துயரசெய்தி மனத்தை உலுக்கியது சைவம் தழைக்க பாடுபட்டவரை இழந்து சமயஉலகம் தத்தளிக்கிறது அன்னாரின் ஆன்மா இறையடியில் இளைப்பாற. பிரார்த்தனை செய்கிறோம் அவர்விட்டுசென்ற பணிகளை பின்தோன்றலான சின்னத்தம்பிரான் (இளவரசு)செய்வதற்கு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கிறோம் .


என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment