நாகை மாவட்டம் பாங்கல் நால்ரோடு கடைத்தெரு பகுதியில் பொதுவுடமைப் போராளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ். தனுஷ்கோடி 28ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வீ. இராஜகுரு தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ & நாகை மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து, கீழ்வேளூர் எம்.எல்.ஏ வி.பி. நாகை. மாலி, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. வேனு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் கே.என். முருகானந்தம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ. ராஜா, ஏ.சசிரேகா,டி.வி. கார்ல்மார்க்ஸ், எஸ். முத்துமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.தங்கமணி மற்றும் துணைத் தலைவர் கே.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிறைவாக ஒன்றிய குழு உறுப்பினர் வீ. தனபால் நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment