ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழப்பு..... ஐ.டி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை...... - MAKKAL NERAM

Breaking

Sunday, August 17, 2025

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழப்பு..... ஐ.டி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை......

 


கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் அண்ணா நகர் செம்மொழி கதிர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் ரஞ்சித்குமார் (24 வயது). இவர் பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.


இதற்கிடையில் ரஞ்சித்குமார் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் வரை இழந்ததாக தெரிகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி வீட்டில் அதிக அளவில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்று குடும்பத்தினர் காப்பாற்றினர்.


இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சித்குமார் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரஞ்சித்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment