தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் புலியருவி, சிற்றருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குற்றாலம், புளியரை, செங்கோட்டை, வல்லம், இளஞ்சி, ஆயிரப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தென்காசியில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
No comments:
Post a Comment