நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் வலிவலம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோில்களில் ஒன்றான மற்றும் மூவரால் பாடல் பெற்ற ஸ்தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து செல்கின்றனர். மேலும் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு வரும் பக்தர்கள் சேதமடைந்து காணப்படும் சாலையால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வலிவலம் இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து இந்த சிவன் கோயிலை இணைக்கும் பிரதான சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து ஜல்லிக்கட்டில் பெயர்ந்து நடந்து கூட செல்ல முடியாத அளவில் உள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் கோபுர வாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சேதமடைந்ததோடு மட்டுமின்றி ஏற்கனவே அமைந்த தார் சாலையும் சேதம் அடைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கப்பிச்சாலை போடப்பட்டது.
அவையும் முழுமை பெறாமல் ஜல்லிகற்கள் பரப்பி செம்மண் லேயருடன் நிற்கிறது. ஆகவே அப்பகுதியில் சேதம் அடைந்து காட்சியளிக்கும் சாலையை முழுவதுமாக செப்பனிட்டு தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments:
Post a Comment