சிவகங்கை அருகே ஒரே ஒரு முதியவரை தவிர இரவோடு இரவாக ஊரை காலி செய்த மக்கள்..... - MAKKAL NERAM

Breaking

Monday, August 4, 2025

சிவகங்கை அருகே ஒரே ஒரு முதியவரை தவிர இரவோடு இரவாக ஊரை காலி செய்த மக்கள்.....

 


சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து என்பவரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்த அந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளும் சரியாக இல்லை.

அடுத்தடுத்த நடந்த கொலை சம்பவங்களும் மக்களிடம் பீதியை கிளப்பியது. இதனால் ஒட்டுமொத்த கிராம மக்களும் இரவோடு இரவாக ஊரை காலி செய்த நிலையில் நாட்டாக்குடி கிராமத்தில் தற்போது ஒரு முதியவர் மட்டுமே வசித்து வருகிறார்.

No comments:

Post a Comment