நாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு மீனவ கிராமமான சாமந்தான் பேட்டையில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருவதாலும் இரண்டு தலைமை ஆசிரியர்களும் இரண்டு தேசிய கொடி கம்பங்களும் ஒரே வளாகத்தில் இருக்கின்றன பள்ளியில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் குளறுபடி ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமலும் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன இதனால் இப்பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரிடமும் தற்போது உள்ள கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பள்ளியை அதே பகுதியில் உள்ள வேறு இடத்திற்கு கட்டித் தர கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது.
இது பற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பின இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி வாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இது பற்றி தகவல் அறிந்த வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதில் போராட்டக்காரர்கள் எங்களுக்கு தீர்வு கிடைக்காமல் போராட்டம் கைவிடப்போவதில்லை என தெரிவித்தனர்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி




0 Comments