கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தோழிகளான இருவரும் அவ்வபோது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அண்ணன் கண்டித்ததால் 18 வயது மாணவி, தனது தோழியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, ஓரினசேர்க்கைக்கு வர மறுத்த தனது தோழியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் பேசாவிட்டால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 18 வயது மாணவி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு, நேற்று 20 வயது மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து, ஓரினச்சேர்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் உள்ளதா? என ஆராய்ந்தனர். இதனிடையே 18 வயது மாணவியின் உறவினர்கள் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து, தோழியை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து தோழியை போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் மீண்டும் ஓரினசேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்தார். தனது மரணத்திற்கு மாணவி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு 2ஆம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment