மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து ஆடுதுறை செல்லக்கூடிய சாலையில் இரு சக்கரம்,கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க சமூக செயற்ப்பாட்டாளரும் விசிக மாநில துணைச் செயலாளருமான ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் வேகத்தடை உடனே அமைக்க வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதை அடுத்து ஆயப்பாடி மற்றும் திருக்களாச்சேரி பள்ளிக்கூடம் கடைவீதி முக்கிய சந்திப்பு அருகே மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்துக் கொடுத்ததற்கு சமூக செயற்ப்பாட்டாளரும்,பொதுமக்களும் மாவட்ட அரசு நிர்வகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment