தென்காசி வழியாக பெங்களுரு செல்லும் சிறப்பு ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும்..... பா.ஜ.க மாவட்டத்தலைவர் கோரிக்கை......


திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக பெங்களுரு செல்லும் சிறப்பு ரெயில் சேவையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் சிறப்பு ரயில் எண் 06103ஃ04 திருநெல்வேலி – சிமோகா டவுன் (தென்காசி மற்றும் பெங்களுரு வழியாக) அறிவிக்கப்பட்டதற்கு தென்காசி பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த ரயில் சேவை, நீண்டகாலமாகக் காத்திருந்த மக்களின் தேவையை நிறைவேற்றி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் அருகிலுள்ள மாவட்ட மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சேலம் மற்றும் பெங்களுருவுடன் நேரடி இணைப்பை வழங்குவதால், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ரயில் சேவை மாணவர்கள்,  பணியாளர்கள், தொழில்முனைவோர், யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த ரெயில் சேவையை நீட்டிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments