மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சார்பில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் .ஆர். நாகராஜன் தலைமைவகித்தார்.விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர் முனைவர். ம.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் நா. பாஸ்கரன் கலந்துகொண்டு “இந்தியாவில் ஆசிய யானைகளின் நிலை, கலாச்சார மோதல் மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இதில் ஆசிய யானை மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்படுகின்ற மோதல்களையும் அதனை எவ்வாறு தடுப்பது மற்றும் பாதுகாப்பது உள்ளிட்ட பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
இந்தியாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சுட்டிக்காட்டியவர் அதற்கான காரணிகளாக வனங்களுக்கு இடையில் மின்சார முள்வேலி அமைத்தல், பாதுகாப்பற்ற ரயில்வே தண்டவாளங்களை அமைத்தல், நிலங்களை அபகரித்தல் போன்றவை முக்கிய காரணிகளாக குறிப்பிட்டார். இத்தகைய மனித மற்றும் ஆசிய யானைகளின் பங்கீடுகளில் ஏற்படுகின்ற மாற்றம் மோதலாக உருவெடுக்கின்றன. இத்தகைய மோதல்களை தவிர்ப்பதற்கு யானைகளின் வாழ்விடத்தை பாதுகாப்பதும் பாதுகாப்பான மனித மற்றும் ஆசிய யானைகளின் வாழ்விட பங்கீடு முக்கியமானது என பேசினார். பேராசிரியர் முனைவர். சா.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்தினார்.
இதில் ஆராய்ச்சி மாணவ மாணவிகள், முதுகலை மாணவ மாணவியர்கள் மற்றும் பிற துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியை முனைவர். அ. சங்கரி செய்திருந்தார்.பேராசிரியர்கள் முனைவர். வீ. துரைமுருகன் வரவேற்றார், முனைவர் செ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment