• Breaking News

    நாகையில் புத்தக திருவிழா..... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள கடைகளில் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு....


    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கிய புத்தகத் திருவிழா 11 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில்  நாகப்பட்டினம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என   திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தலின்படி  நாகப்பட்டினம் நகரப் பகுதிகள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி உள்ள கடைகளில் புகையிலை தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பபட்டது.புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டர் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பீடி,சிகரெட், போன்றவை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதா என்றும் கண்டறியப்பட்டது. No Smoking விளம்பரம் இல்லாத கடைக்கு புகையிலை தடுப்பு சட்டம் -2003ன்படி அபராதம் விதிக்கப்பட்டது. 

    இந்த ஆய்வில் மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் மரு.வினோத் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள்,செந்தில் குமார், சுத்தானந்த கணேஷ், மணிமாறன்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாகை செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி 


    No comments