கும்மிடிப்பூண்டியில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, August 18, 2025

கும்மிடிப்பூண்டியில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது



திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளைக் கழக செயலாளர் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளரும் சென்னை மண்டல ஐ டி விங் செயலாளருமான வினோத்குமார் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

 தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை விற்பனை  அதிகரித்துள்ளது வரும் சட்டமன்ற.2026  தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அமையும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என அப்போது அவர் தெரிவித்தார். இதில்  முன்னாள் எம்பி வேணுகோபால் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு   நகர செயலாளர் எஸ் டி டீ.ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கிளைக் கழக செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 


முன்னதாக புரட்சித் தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திறனற்ற திமுக அரசின் நான்கரை ஆண்டுகால அவல நிலையை தனது சூறாவளி சுற்றுப்பயணம் மூலம் பொது மக்களுடைய எடுத்துக் கூறி வருகிறார் இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணத்தை மேற்கோள் காட்டும் விதமாக  கும்முடிபூண்டி பஜாரில் இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை அப்போது அவர்கள் தொடங்கி வைத்தனர் . இந்நிகழ்ச்சியில் மாணவரணி மாவட்ட செயலாளர் ராகேஷ். மாவட்ட துணை செயலாளர்  எஸ் எம் ஸ்ரீதர். சியாமளா தன்ராஜ். இளம் பெண்கள் இளைஞர்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி, சி, மகேந்திரன், முன்னாள் சேர்மன் எம், எஸ், எஸ், சரவணன், கே, எம், எஸ், சிவகுமார். முல்லைவேந்தன், கோபி. கணபதி சரவணன் ஓடை ராஜேந்திரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள் பேரூர்  கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment