மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரயில்வே கேட் கிராசிங் பகுதியில் உள்ள சாலையை, ரயில்வே நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
மாப்படுகை ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் தண்டவாளங்களையொட்டியுள்ள சாலை மிகவும் மேடு, பள்ளமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு, வயதானோர், பெண்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அடிக்கடி யாரேனும் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரங்களிலும், சிக்னல் போடப்படும் சமயங்களிலிலும் அதிகமான வாகனங்கள் ஒரே சயமத்தில் செல்லும்போது சாலையை கடப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே அந்த சாலையை மேடு பள்ளங்கள் இன்றி சரியான வகையில் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினரும் தெர்விக்கின்றனர்.
No comments:
Post a Comment