கொடைக்கானல்: மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை..... உறவினர்கள் சாலை மறியல் - MAKKAL NERAM

Breaking

Saturday, August 23, 2025

கொடைக்கானல்: மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை..... உறவினர்கள் சாலை மறியல்

 


திண்டுக்கல், கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு(38),இவரது மனைவி சசிரேகா. தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர் இதனால் கணவன் மனைவி விவாகரத்து மனு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜான்பாபு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மனைவி சசிரேகாவின் தகாத உறவு குறித்த வீடியோ மற்றும் ஆடியோ கணவர் ஜான்பாபுவிடம் சிக்கி உள்ளது. அந்த ஆதாரத்தை அழித்திட வேண்டும் என்று தகாத உறவில் ஈடுபட்ட வாலிபர் ஆதிஷ்ஆண்டனி உறவினர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது இதனால் 

தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி சசிரேகா, தகாத உறவில் இருக்கும் ஆதேஷ் ஆண்டனி, மாமியார் மற்றும் சிலரின் பெயரை குற்றம் சாட்டிய நிலையில் அதை ஆடியோவாக மரண வாக்கு மூலமாக வாட்ஸப்பில் பதிவு செய்து முக்கிய உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.

மரண வாக்குமூலம் அளித்த நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.


செய்தியாளர் P.S.சுதா

No comments:

Post a Comment