ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
ஷிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஆவார். ஷிபு சோரன் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டு வரும் ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.
இதனிடையே, கிட்னி தொடர்பான பிரச்சினை காரணமாக ஷிபு சோரன் கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷிபு சோரனின் இறுதிச்சடங்கு ஜார்க்கண்ட்டில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment