ஆவுடையானூர் ஊரணியில் ரூ.16 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Monday, August 4, 2025

ஆவுடையானூர் ஊரணியில் ரூ.16 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்

 


ஆவுடையானூர் ஊரணியில் ரூ.16 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆவுடையானூர் மருத்துவர் தர்மராஜீன் ரூ.5.33 லட்சம் பங்கு தொகையுடன் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில்  தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி துணைத்தலைவர் செல்வமேரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் இராம.உதயசூரியன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் தர்மராஜ் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களான செல்லப்பா, துரைசிங், வேலன், ஆசிரியர் தாமோதரன், அருள்ஜோசப், தங்கம்,மகாராஜா,முத்துநாதன், நாராயணசாமி, இராஜேந்திரன், இராஜதுரை, சௌந்தர்ராஜன் இராஜ், சேர்மக்கனி, குமரேசன், செல்வன்,முருகன், சிவகுமார், சுரேஸ் சூரியா, பொன்மலர், தென்றல்முருகன், அலெக்ஸ், சௌந்தர், சந்திரன், சுப்பிரமணியன், புளோரசிங்ராஜா, கண்ணன், கண்ணன், பால்முருகன், நயினார்,கணேசன் சுந்தர்,முருகன், பிரகாஷ்,செல்வகுமார், இராஜபிரபாகர், மனோகர், செல்வன், கிங் கணேஸ், குமரேசன், அருள்ராபின்சன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் தங்கச்செல்வன், நன்றி கூறினார்.

ஊரணி தடுப்புச்சுவர் அமைக்க ரூ.5.33 லட்சம் பங்களிப்பு தொகை வழங்கிய மருத்துவர் தர்மராஜ் ஏற்கனவே ரூ.1.80 கோடி மதிப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம், ரூ.2.80 கோடி தோரணமலை திருமண மண்டபம் ரூ.3கோடியில் ஆர்.சி.பள்ளிக்கு ரூ.10  லட்சம் மதிப்பில் நுழைவுவாயில் அகரகட்டு பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment