புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் காஜா மைதீன், பீர் மைதீன், முஹமது அலி பிலால், அப்துல் பாசித், செய்யத்அலி, மாணவரணி செயலர் ரபீக் ராஜா மற்றும் புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பேரணியை தென்காசி மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் தொடங்கி வைத்தார் புளியங்குடி பஸ் நிலையம் பின்புறம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து தொடங்கி மெயின் ரோடு வழியாக பள்ளிவாசல் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட னர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் காஜா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் அப்துந் நாசர் , செய்யது இப்ராஹிம், முஹம்மது காசிம்; மாவட்ட தொண்டரணி பொருப்பாளர் ஷேக்தாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment