பெருங்களத்தூர்: பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 6, 2025

பெருங்களத்தூர்: பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நியூ பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், ரயில்வே பார்டர் சாலையில் பெட்டிக் கடையில் சிறுவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


அதன் பேரில் பெட்டிக் கடையை கண்காணித்த போலீஸார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். 


இதனையடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட பழனிகுமார்(33), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 30 கிலோ குட்கா பொருட்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 


அவர் மீது சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக சிறார் நீதிச் சட்டம் 77 மற்றும் கோட்பா சட்டம், 123 பி.என்.எஸ். உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment