மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமத்தில் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய்க்கால் குறுக்கே பழமையான சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது இந்த பாலம் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக சேதம் அடைந்து இடிந்த நிலையில் உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை வைத்த நிலையில் பாலத்தை இடித்து புதிதாக கட்டித் தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன் தலைமையில் அரசு பேருந்து மற்றும் அவ்ழியாக சென்ற வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன்,மற்றும் குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் விரைந்து பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment