நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை (தோட்டம்) கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ வாலை மனோன்மணி அம்மன் ஆலயத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி சுமந்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் வயிற்றில் மாவிளக்கு போட்டு, அங்க பிரார்த்தனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுமார் 50 வருடத்திற்கும் மேலாக இக்கோயிலில் ஆண்டுதோறும் 18 ஆம் பெருக்கு தினத்தன்று ஸ்ரீ வாலை மனோன்மணி அம்மனுக்கு பாலாபிஷேகம், மாவிலக்கு, அங்கு பிரார்த்தனை செய்வது குறிப்பிடத்தக்கதாகும் .
நாகை:செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment