அரசூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய தீ மிதி திருவிழாவில் 100 க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்திகடனை செலுத்தினர் - MAKKAL NERAM

Breaking

Monday, August 4, 2025

அரசூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய தீ மிதி திருவிழாவில் 100 க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்திகடனை செலுத்தினர்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  அருகே  அரசூர்     கிராமத்தில் அருள்பாலிக்கும்  அருள்மிகு ஸ்ரீ   எல்லையம்மன்  ஆலயத்தில்  பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பல்வேறு  வாகனங்களில் எழுந்தருளி  அருள் பாலித்தார்.10-ஆம் நாளான இன்று   அருள்மிகு ஸ்ரீ எல்லை அம்மன்  அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

அதனை தொடர்ந்து  150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சியை ஏற்பாட்டை அரசூர் கிராம மக்கள் செய்திருந்தனர் இதேபோன்று மேல பட்டறை கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீமிதித்து தாங்கள் நேத்தி கடனை செலுத்தினர்.

 நிகழ்ச்சி ஏற்பாட்டை மேலபட்டறை கிராமத்தினர் அதிமுக பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்தனர் மேலும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில்  பொன்னேரி ,கும்மிடிப்பூண்டியை சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வான வேடிக்கை நடைபெற்றது.

No comments:

Post a Comment