இந்தியா மீது வரி மேலும் உயர்த்தப்படும்...... அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை...... - MAKKAL NERAM

Breaking

Monday, August 4, 2025

இந்தியா மீது வரி மேலும் உயர்த்தப்படும்...... அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை......

 


ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைத்துவிட்டதாகக் கூறப்பட்டது.ஆனால், வழக்கம்போல எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கான வரி மேலும் உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ரஷியாவிடம் இருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்கிறது. உக்ரைன் போரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை. இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அந்த நாட்டின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவேன்" என்று கூறினார்.

No comments:

Post a Comment