மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய மாணவர்களின் வரவேற்பு நாள் மற்றும் ஆங்கிலத்தில் கதை சொல்லுதல் போட்டி நடைபெற்றது.
ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் தலைமைவகித்து பேசுகையில் கதைகளை கேட்டல் மற்றும் பிறருக்கு கூறுதல் மூலமாக மொழித்திறன் பெருமளவு வளர்கிறது. முதலாம் ஆண்டு மாணவர்களாகிய நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி சிறந்த ஆங்கில மொழியாளுமை பெற்றவர்களாக திகழ வேண்டும் என்றார். இணை பேராசிரியர் டாக்டர் எம். வெங்கடேசன் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.
இதில் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் நீதிக் கதைகள், தங்களின் பாடப் புத்தகங்களில் உள்ள ஆங்கில நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு கதைகளை எளிய ஆங்கிலத்தில் அதற்கேற்ற முக பாவனைகளுடன் குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் கதை கூறியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை ஏ.கனிமொழி மற்றும் துறை பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர் செய்திருந்தனர். இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment