கூட்டணியில் நான் இருக்கிறேனா.? இல்லையா.? நயினார் நாகேந்திரன் சொல்ல வேண்டும்..... டிடிவி தினகரன் பேட்டி - MAKKAL NERAM

Breaking

Sunday, August 31, 2025

கூட்டணியில் நான் இருக்கிறேனா.? இல்லையா.? நயினார் நாகேந்திரன் சொல்ல வேண்டும்..... டிடிவி தினகரன் பேட்டி

 


தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.


நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.  தே.மு.தி.க.. பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.


இந்நிலையில் பரமக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும். ஏற்கெனவே திமுக, என்.டி.ஏ. அணி உள்ளது. அதேபோல் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்” என்று அவர் கூறினார்.


இதனைத்தொடர்ந்து என்.டி.ஏ. கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா..? என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், “என்.டி.ஏ-வில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொன்னால் நன்றாக இருக்கும். நாங்கள் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவோம்” என்று டிடிவி தினகரன் கூறினார்.

No comments:

Post a Comment