தென்காசி: பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா


ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் தங்களின் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  விநாயகருக்கு அவல், பொரி, அரிசி கொழுக்கட்டை, கடலை பருப்பு, சர்க்கரை பொங்கல் ,சுண்டல்  போன்ற பிரசாதங்களை படைத்து வழிபட்டனர். 


மேலும் விநாயகர் துதி பாடல்கள், மந்திரங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடி அருகம்புல் எருக்கம் பூக்களால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தனர். மாணவ, மாணவியர் தங்கள் கைகளால் களிமண்ணில் அலங்கார விநாயகரை உருவாக்கி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments