மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சார்பில் தேசிய தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் முனைவர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்தார், விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர் முனைவர் ம.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராசிரியை முனைவர் அ. சங்கரி கலந்து கொண்டு "தேனீக்கள் சிறந்த மகரந்த சேர்க்கையாளர் இனம்" என்ற தலைப்பில் மாணவ மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது தேனீக்களின் வகைகள், நன்மைகளை எடுத்துரைத்ததோடு மட்டுமில்லாமல் இயற்கை விவசாயத்தில் தேனீக்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் பற்றி விவரித்தவர், மேலும் தேனீக்கள் இனம் அழிந்து விட்டால் நான்கு ஆண்டுகளில் உலகத்தில் விவசாய உற்பத்தி பூஜ்ஜிய நிலையை எட்டிவிடும் இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை குறிப்பிட்டார்.
தேனீக்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் இனிவரும் நாட்களில் தேனீக்கள் வளர்ப்பில் ஆர்வம் காட்ட உள்ளதாகவும் தேனீக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த உள்ளதாகும் உறுதி ஏற்றுக் கொண்டனர். பேராசிரியர் முனைவர் மா.மூர்த்தி வரவேற்றார். முனைவர். க. கிருஷ்ணப்பா நன்றி கூறினார். முனைவர் கோ.செ.அபிராமி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிற துறை மாணவ ,மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment