• Breaking News

    (மகன்)திமுக..... மல்லை சத்யா குற்றச்சாட்டு

     


    மதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யா சென்னை சிவானந்த சாலையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

    மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகனும் கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை.வைகோ ஆகியோருக்கும் எதிராக மல்லை சத்தியா களம் இறங்கியுள்ளார்.

    இருவரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் நிலையில் மல்லை சத்யா, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். சென்னை சிவானந்த சாலையில் ஆகஸ்ட் 2 (நாளை) தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு அவரது ஆதரவாளருடன் மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    மதிமுக இப்போது மகன் திமுகவாக மாறி இருக்கிறது. இதுவரை நான் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. இன்று வரை பதவியில் தான் நீடிக்கிறேன். பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு நாளை சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

    வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மதிமுக சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்த கட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்தார். மேலும் இதே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

    No comments