• Breaking News

    திருக்குவளை அருகே சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சமத்துவபுரம் ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன்


    திருக்குவளை ஊராட்சி, சமத்துவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக்கோயில் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 30ஆம் தேதி வந்த கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கஞ்சிவார்த்தல் வார்த்தல் நிகழ்வைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி விஜயாகுமரவேல் செய்திருந்தார்.

    கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன் 

    No comments