தமிழகத்தில் அரசியலுக்குள் களமிறங்கிய நடிகர் விஜய்க்கு எதிராக, தற்போது பிரபல நடிகர் ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், “முக ஸ்டாலினை அங்கிள் எனவும், பிரதமர் மோடியை சொடக்கு போட்டு பேசுவது நாகரிகத்துக்கே எதிரானது. தன்னை அரசியல்வாதி என நினைக்கும் ஒருவர் இவ்வாறு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் ‘தலைவா’ திரைப்பட வெளியீட்டுக்காக ஜெயலலிதா காலில் விழுந்தது யார் என்பதை நினைவுகூரச் சொல்லிய அவர், “ அவருக்கு அறிவிருக்கா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் மட்டும் இல்லாமல், “விஜய்யே இவ்வாறு தரக்குறைவாகப் பேசியால், அவருடைய தொண்டர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?” என கேள்வி எழுப்பிய ரஞ்சித், விஜய் செயலில் நாகரிகமற்ற தன்மை தென்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment