விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், த.வெ.க. தொண்டர்களை குறிவைத்து கிண்டல் செய்தது, அங்கு இருந்த மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.த.வெ.க. தொண்டர்களிடம் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் ‘தளபதி தளபதி’ என்று கத்துகிறார்கள்.
எனக்கோ அது ‘தலைவிதி தலைவிதி’ என்று கேட்கிறது. சரி எதற்காக வந்தீர்கள் என்று கேட்டால் ‘TVK TVK’ என்று கத்துகிறார்கள். டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்திருக்கிறீர்கள்?” என்று சீமான் நையாண்டி செய்தார்.மேலும், “புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமாக போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடினால் புலிக்கு என்ன மரியாதை?” என்றும் சீமான் கூர்ந்தார்.
தற்போது இணையத்தில் விஜய் ரசிகர்களை அணிலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில், த.வெ.க. தொண்டர்களை ‘அணில்’ என்று சீமான் கிண்டலடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment