நாகப்பட்டினம் மாவட்டம் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்டத் தலைவர் ஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்நிகழ்வில் 186 வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு மூத்த புகைப்படக்காரர்களுக்கு கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். மேலும் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தில் விபத்து மற்றும் இறப்பு போன்ற சம்பவங்கள் நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் தலா 300 ரூபாய் செலுத்தி உயிரிழந்த உறுப்பினர்களுக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் திட்டமான காக்கும் கரங்கள் திட்டத்தை டிவிபிஏ சங்கம் அறிமுகப்படுத்தி மாவட்டத் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார்.
இந்நிகழ்வில் நகர தலைவர் முருகானந்தம் மற்றும் டிவிபிஏ 6 ஆம் மண்டலம் செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் மாவட்ட பிஆர்ஓ சாகுல் நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment