அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி ஈக்வார் பாளையம் ஒன்றித்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகளில் பூத் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுகும்முடிபூண்டி ,ஈகுவார்பாளையம்,பாத்தபாளையம்   உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திண்ணை பிரச்சாரம் செய்வதற்கான பயிற்சி முகாம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுனியம் பலராமன் தலைமையில் ஈகுவார்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 இதில்  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்   கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து   ஆலோசனைகளை வழங்கினார். இதில்  கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர் கோபால் நாயுடு முன்னாள் சேர்மன் கே எம் எஸ் சிவக்குமார் அம்மா பேரவை செயலாளர் முல்லைவேந்தன் கழக துணை செயலாளர் சியாமளா தன்ராஜ் இலக்கிய அணி செயலாளர் உதயகுமார் பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் பூலம்பேடு முன்னால் தலைவர் கருணாகரன் இஜிஎம் கணபதி ஐ டி விங் ராஜா தொழிற்சங்க அணி மோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments