தேனி அருகே வீரபாண்டியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்.... 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்.....

 


தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன் ரவி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், லோகநாதன், செந்தில்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும், தேனி மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், சுருளி அறிவி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments