தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 193 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ஏ.வி.என்.எல் சமூக செயலாற்றுகிற பொறுப்பின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து,193 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஏ.வி.என்.எல்.நிறுவன துணை பொது மேலாளர் தஜீவா, ஏ.எல்.ஐ.எம்.சி.ஓ. உதவி மேலாளர் .ரிஷப் மல்ஹோத்ரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments