கீழப்பாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற சென்னை அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையினை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.
கீழப்பாவூர் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாவூர் கிங்ஸ் நண்பர்கள், பாவூர் கிங்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான இறுதி போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சென்னை அணி முதல்பரிசும், கோவை அணி 2வது பரிசும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளி;ப்பு விழாவில் சென்னை அணிக்கு முதல்பரிசு ரூ.1 லட்சம் மற்றும் வெற்றிக்கோப்பையினை மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜனும், 2வது பரிசு பெற்ற கோவை அணிக்கு ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையினை கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜசேகரும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்; பாவூர்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் பட்டுராஜன், முனைவர் பொன்அன்பழகன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்.அறிவழகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தங்கச்சாமி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணை செயலாளர் வைரசாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், நிர்வாகிகள் தெய்வேந்திரன், அன்பரசு, சமுத்திரபாண்டி, தங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பாவூர் கிங்ஸ் நண்பர்கள், பாவூர் கிங்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


0 Comments