தென்காசி மாவட்டத்தில் அக்2 ல் மதுபான கடைகள் மூடல்..... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 


தென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2 ந்தேதி மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, அக்டோபர் 2ந்தேதி அனைத்து அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றம், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும், அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments