கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி..... விஜய் அறிவிப்பு

 


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர்  மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த கூட்ட நெரிசல் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சார்பில் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது உயிரிழந்த 39 பேருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments