தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 475 மனுக்கள் பெறப்பட்டன


தென்காசியில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 475 மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 475 மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்;ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3285 வீதம் மொத்தம் ரூ.13,140 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments