தென்காசியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.55.44 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்


தென்காசி மாவட்டத்தில் 523 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்.

தென்காசி அருகேயுள்ள இலத்தூர் தனியார் பள்ளியில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை வகித்தார். ராணி ஸ்ரீகுமார் எம்பி, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்பு, அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக- நகர்ப் புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் இம்மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் 5,386 மகளிர் சுயஉதவிக் குழுக் களும், நகர்ப்புறங்களில் 3,371 மக ளிர் குழுக்களும் செயல்படுகின் றன. இவற்றில் 1,14,361 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கிராமப்புற 331 மகளிர் குழுக்க ளைச் சேர்ந்த 4,458 பேருக்கு ரூ. 32.58 கோடி, நகர்ப்புற 192 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 2,148 பேருக்கு ரூ.20.02 கோடி கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி ரூ. 1 கோடி,வட்டார வணிக வளமையம் மூலம் 134 குழுக் களுக்கு ரூ. 67 லட்சம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 11 குழு உறுப்பினர்களுக்கு ரூ. 6.50 லட்சம் என மொத்தம் ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா ப்ரியதர்ஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில்மையப் பொது மேலாளர் மாரியம்மாள், தாட்கோ மேலாளர் ராஜ்குமார், கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments